முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன, மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பாவாய்!
muppaththu mUvar amararkku mun cenRu
kappam thavirkkum kaliyE thuyilezhaay
ceppam utaiyaay thiRal utaiyaay ceRRaarkku
veppam kotukkum vimalaa thuyilezhaay
ceppenna menmulaic cevvaayc ciRu maruNGkul
nappinnai naNGkaay thiruvE thuyilezhaay
ukkamum thattoLiyum than^thu un maNaaLanai
ippOthE emmai nIraattu ElOr empaavaay!